மாமல்லபுரம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

78பார்த்தது
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க மாமல்லபுரம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை.

தீவிரவாதிகள் போர்வையில் வந்த 4 பேர் பிடிபட்டனர்!

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க மாமல்லபுரம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் தீவிரவாதிகள் போர்வையில் வந்த 4 பேர் பிடிபட்டனர்.

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 2 நாட்கள் சீவிஜில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை சட்டம், ஒழுங்கு மற்றும் கடலோர காவல் படை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீசாரும் இணைந்து ‘சாகர் கவாச எனப்படும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை 2 நாட்கள் நடத்துகின்றனர். இதில், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிஅபிராம் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, கடலோர காவல் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் முன்னிலையில் ஒத்திகை நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி