காஞ்சிபுரம் மாவட்டம்
வாலாஜாபாத்- - செங்கல்பட்டு இருவழிசாலை, நான்குவழிச் சாலையாக மேம்படுத்தும் பணி நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் பாலாற்று படுகையில், சாலை அகலப்படுத்தும் பொருட்டு பாலம் கட்டுமான பணி நடைபெறுகிறது.
பணி மேற்கொள்ளும் இப்பகுதிக்கு அருகே சாலை மிகவும் சேதமாகி பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழை நேரங்களில் அப்பள்ளங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
இதனால், அச்சாலையில் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. எனவே பள்ளம் ஏற்பட்டுள்ள சாலை பகுதியை சீரமைத்து விபத்து அபாயத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.