கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி கூடுவாஞ்சேரியில் துவக்கம்

779பார்த்தது
கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி கூடுவாஞ்சேரியில் துவக்கம்
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, 19வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெரு, முத்து மாரியம்மன் கோவில் தெரு ஆகியவற்றுக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை.


இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதிவாசிகள் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, 10 லட்சம் ரூபாய் பதிப்பில், கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிக்கு, நேற்று காலை 10: 30 மணிக்கு பூமி பூஜை நடந்தது.

இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:

ராஜிவ் காந்தி நகர், திருவள்ளுவர் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெருவில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. 20 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் இல்லாமல், நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தோம்.

கால்வாய் அமைத்து தர வேண்டும் என, பலமுறை மனு செய்திருந்தோம். அதன் அடிப்படையில், எங்கள் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.

இன்னும் 15 நாட்களுக்குள், கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி