செங்கல்பட்டு மாவட்டம் படூரில் இயங்கி வரும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் குழுமத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெரு விழா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ஆயர் டாக்டர் கிரிகோரியோஸ் மார் ஸ்டீபனோஸ், ஜெர்மன் நாட்டின் துணை தூதர் மைக்கேலோ குச்லர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கான பாதிரியாரின் தொடக்க பிரார்த்தனையோடு விழா துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேரல் பாடல்களும் பாரம்பரியமான இசை பாடல்களும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டிற்கான காலண்டர் வெளியீடும் நடைபெற்றது. தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினர்.
கிறிஸ்துமஸ் விழாவை தொடர்ந்து சென்னை அருகே உள்ள பல்வேறு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் குறித்த நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 2 லட்சம் வரை காசோலையை சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கி மாணவ மாணவியர்களை ஊக்குவித்தனர். விழாவில் இந்துஸ்தான் கல்வி குழும அனைத்து நிலை பொறுப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெருமக்கள், மாணவ மாணவியர் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.