கடமலைபுத்தூர் திருச்சபையில் கிறிஸ்மஸ் விழா

79பார்த்தது
கடமலைபுத்தூர் திருச்சபையில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள கடமலைபுத்தூர் ஐபிசி ரெகொபோத் திருச்சபையில் கிறிஸ்மஸ் விழா மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் ஆகியோர் கிறிஸ்மஸ் விழாவில் கலந்து கொண்டு கேக் வெட்டி ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கிறிஸ்துவ மக்கள் 200க்கும் மேற்பட்டவருக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி