தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை, ஆலந்தூர் திட்டம் - 16, சென்னை மாவட்டம் சார்பில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" 2ம் கட்ட துவக்க விழா இன்று (18. 11. 24 திங்கட்கிழமை) காலை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாலவாக்கம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.
இதில் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார், தொடர்ந்து 0-6 வயது பச்சிளம் குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பாலவாக்கம் சோமு, 183வது வார்டு கவுன்சிலர் டாக்டர் தமிழரசி சோமு, 188வது வார்டு கவுன்சிலர் சமீனா செல்வம், 183வது திமுக வட்ட செயலாளர் பி. எஸ். ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.