பவுஞ்சூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் செய்யூர் விசிக எம்எல்ஏ பனையூர் மு. பாபு பங்கேற்பு!
செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம்
ஒன்றிய பெருந்தலைவர் சாந்திராமச்சந்திரன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிபாபு அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு. பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட 15 துறை சார்ந்த அதிகாரிகளிடம் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கினர்.
இந்த முகாமில் திமுக ஒன்றிய கழக செயலாளர் முகையூர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் சுஜாதா பாரதி பாபு உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.