செங்கல்பட்டு அடுத்த நென்மேலி ஸ்ரீகோகுலம் பொதுப்பள்ளியில், 13வது ஆண்டு விளையாட்டு தின விழா, பள்ளி தலைவர் கோகுலம் கோபாலன் தலைமையில், நேற்று முன்தினம் (ஜனவரி 9) நடந்தது. விளையாட்டு போட்டிகளை, சென்னை ஒய்.எம்.சி.ஏ., கல்லூரி உடற்கல்வியியல் துறை துணை பேராசிரியர் பெலிக்ஸ் துவக்கினார். பள்ளி முதல்வர் சங்கரநாராயணன் வரவேற்றார். ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், கராத்தே, சிலம்பாட்டம், மனிதகோபுரம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளியின் துணைத்தலைவர்கள் பிரவின், லிஜிஷாபிரவின் உள்ளிட்ட மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குனர் ராஜேஷ் நன்றி கூறினார்.