அச்சிறுபாக்கம் ஒன்றியம், கரசங்கால் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் தெரு பகுதியில், விழா மேடை கட்டும் பணிக்காக, நேற்று பூமி பூஜை நடந்தது.
அம்பேத்கர் தெரு பகுதியில், விழா மேடை அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு, தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில், மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாரியம்மன் கோவில் அருகே விழா மேடை கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
இந்நிகழ்வில், மாவட்ட கவுன்சிலர் வசந்தா, அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், கரசங்கால் ஊராட்சி தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.