5 அடி ஆழ பள்ளம் விபத்தை தவிர்க்க தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

69பார்த்தது
5 அடி ஆழ பள்ளம் விபத்தை தவிர்க்க தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லம் சந்திப்பு அருகே இருந்து, எறையூர் சாலை செல்கிறது. ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்கவில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஏராளமானோர், நாள்தோறும் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர்.

போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை சந்திக்கும் இடத்தில், 5 அடி ஆழத்திற்கு மேல் சாலையோரம் பள்ளம் உள்ளது.

இதில் தடுப்பு இல்லாததால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் இருந்து, எறையூர் செல்லும் சாலையில், வல்லம் சந்திப்பில், விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், சாலை தடுப்பு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி