கொசு தடுப்பு நடவடிக்கையில் 2. 40 லட்சம் ரூபாய் அபராதம்

70பார்த்தது
கொசு தடுப்பு நடவடிக்கையில் 2. 40 லட்சம் ரூபாய் அபராதம்
டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால், கொசு ஒழிப்பு நடவடிக்கையை, மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது. சோழிங்கநல்லுார் மண்டலத்தில், இரண்டு நாட்களாக கட்டுமான பணிகள் நடக்கும் இடங்கள், விடுதிகள், குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 192, 194 முதல் 200 வரை உள்ள, எட்டு வார்டுகளில் 13 இடங்களில், டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 5, 000, 10, 000 மற்றும் 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம், 2. 40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று சுகாதார சீர்கேடாக இருந்தால், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி