வையாவூரில் அதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
கழக அமைப்பு செயலாளர் முருகுமாறன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வையாவூர் விஜி குமரன் அவருடைய மகன் கார்த்திகேயன் அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு படத்திறப்பு விழா மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கழக அமைப்பு செயலாளர் முருகுமாறன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் , மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் ஒரு குடும்பத்திற்கு கறவை மாடு மற்றும் தையல் இயந்திரம் பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.