ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வைட் கண்டித்து பரனூர் சுங்கச்சாவடியில் விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் டாக்டர்
அம்பேத்கர் அவர்களை இழிவாக
பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து
தமிழகம் முழுவதும் விடுதலை
சிறுத்தை கட்சியினர் பல்வேறு
கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு பரனூர் சுங்க சாவடியில் மத்திய உள்துறை அமைச்சர்
அமித்ஷாவை கண்டித்து சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளர் குமரேசன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட விசிக வினர் கண்டன கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தென்னவன், மண்டல பொறுப்பாளர் அமுல்ராஜ், செய்தி தொடர்பாளர் அன்புசெல்வன் உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர்.