அரையாண்டு விடுமுறை கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை 10 நாள்கள் விடப்பட்டிருந்ததாலும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் சென்னை நோக்கி வரும் கார்கள், வேன்கள், பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் இயக்கப்படும் கூடுதல் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களால் செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்திய பின்பு வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து காத்துக் கிடக்கின்றன.
ஆத்தூர் சுங்க சாவடியில் சுங்க கட்டணம் 90% சதவீதம் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாஸ்டாக்கை ஸ்கேன் செய்யும் இயந்திரத்திரத்தினை துரிதமாக பணியாளர்கள் செயல்படாத காரணத்தினாலும் காலதாமதம் ஆகிறது. மேலும் கூடுதலாக இரண்டு சுங்க கட்டணம் வசூல் மையங்கள் திறந்தும் தொடர்ந்து வரும் அதிக எண்ணிக்கையிலான வாகனத்தால்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் சுங்கச்சாவடியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றன.