தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை வழங்கும் திட்டம் அரசு செயல்படுத்தி வருகிறது. இவர்களுக்கு மாதந்தேறும், 4, 000 ரூபாய் உதவித்தொகை அரசு வழங்கி வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சி துறையின், www. tamilvalarchiththut. gov. in என்கிற வலைதளத்தில் கட்டணமில்லாத விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கும், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம், அக். , 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.