சென்னை புறநகர் பகுதியில் பலத்த சூறாவளி காற்று

80பார்த்தது
சென்னை புறநகர் பகுதியான ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று.!!

சாலையில் புழுதி பறப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி.

தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் கிழிந்து தொங்குவதால் வாகன ஓட்டிகள் அச்சம்.!!!


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் அதிகரித்து காணப்பட்டது இந்த நிலையில் ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில்

சென்னை புறநகர் பகுதியான ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது

தற்போது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது இதன் காரணமாக சாலைகளில் உள்ள குப்பைகள் மற்றும் மணல்கள் ஆகியவை பறந்து சாலையில் வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அதேபோல சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர் கிழிந்து காற்றில் பறப்பதால் எப்பொழுது பறந்து வாகனத்தில் விழுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி