தமிழ்நாடு காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக சமூக மற்றும் மனித நல்லிணக்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்
கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக சமூக மற்றும் மனிதன் நல்லிணக்க விழிப்புணர்வு முகாம் இன்று சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் மாவட்ட எஸ். சி. எஸ். டி பிரிவு உறுப்பினர் அன்பு மொழி தலைமையில் நடைபெற்றது, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாள் சாய் பிரனீத் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில்
மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் துணை கண்காணிப்பாளர் நாகலிங்கம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஏற்படும் சாதி ரீதியான வன்கொடுமைகள் மற்றும் சட்டத்தில் உள்ள பிரிவுகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார், பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார் நிகழ்ச்சியில், புள்ளியியல் ஆய்வாளர் பரிமளா தேவி, உதவி ஆய்வாளர்கள் அமுதா, அறிவழகன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.