செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அரசு மருத்துவமனை அருகே, கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த காரின் குறுக்கே வாலிபர் ஒருவர், தனது பைக்கை கட்டுப்பாட்டை இழந்து, காரின் மீது மோதினார். இதனால் காரில் மோதிய வாலிபர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அருகே இருந்தவர்கள் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் உடனடியாக செயல்பட்டு, மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் விசாரணையில் அவர் வீரபோகம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வாணன் (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மேலும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.