மாமல்லையில் கடலரிப்பு நிலத்தில் புகுந்தது கடல்நீர்

79பார்த்தது
மாமல்லையில் கடலரிப்பு நிலத்தில் புகுந்தது கடல்நீர்
மாமல்லபுரத்தில், கடற்கரை கோவிலின் பாதுகாப்பு கருதி, அதைச் சுற்றிலும் பாறை கற்கள் குவிக்கப்பட்டுள்ளன.

கோவிலின் தெற்கில் சுற்றுலா பகுதியினர்உலவும் கடற்கரை பகுதி நீளமாகவும், வடக்கில் உள்ள மீனவர் வாழ்விடப்பகுதி கடற்கரை வளைவானதாகவும் உள்ளது.

கடலில் நீரோட்ட திசை மாற்றம் நிகழும்போது, மீனவர் வாழ்விடப்பகுதியில், சில மாதங்கள் கடல் உள்வாங்கி, கடற்கரை மணற்பரப்புடன் காணப்படும்.

சில மாதங்கள், கடலரிப்பால் கடற்கரை மணற்பரப்பு கடலில் மூழ்கி, குறிப்பிட்ட பரப்பு கடற்கரை அழிந்து, நிலப்பகுதியில் கடல் நீர் உட்புகும்.

வட திசையிலிருந்து தென்திசை நோக்கி, தற்போது நீரோட்டத்தின் திசை மாறியுள்ளதால், கடலரிப்பு படிப்படியாக அதிகரித்து, நிலப்பகுதியில் கடல்நீர் புகுகிறது.

அதனால், இப்பகுதிவாழ் மீனவர்கள், தங்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்க இடமின்றி பாதிக்கப்படுகின்றனர். மீண்டும் நீரோட்டம் இயல்பாகி, கடற்கரை மணற்பரப்பு உருவாகும் வரை, சில மாதங்கள் இப்பாதிப்பு தொடரும் என, மீனவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி