70 வார்டுகளிலும் திட்ட பணி மோசம் மேயர் மீது அதிருப்தி

54பார்த்தது
70 வார்டுகளிலும் திட்ட பணி மோசம் மேயர் மீது அதிருப்தி
தாம்பரம் மாநகராட்சி 2021ல் உருவாக்கப்பட்டது.

ஐந்து மண்டலங்களில் 70 வார்டுகள் என மாநகராட்சியானதும், அடிப்படை பணிகள் உடனுக்குடன் நிறைவேறும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், குப்பை பிரச்னை, பராமரிப்பற்ற பூங்காக்கள் உள்ளிட்ட பணிகள் படுமோசமான நிலையிலே உள்ளன.

பாதாள சாக்கடை இருந்தும், நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது அதிகரித்து விட்டது. சாலைகள் நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் உள்ளன. மொத்தத்தில், மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை.

மாநகராட்சி மேயராக உள்ள தி. மு. க. , வின் வசந்தகுமாரி, வார்டுகளில் முறையாக ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டு பிரச்னைகளை நிவர்த்தி செய்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:

மேயர் என்பவர், வார்டுகள்தோறும் சென்று, ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதற்கு விதிவிலக்காக, தாம்பரம் மேயர் உள்ளார்.

தொடர்புடைய செய்தி