ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி: ஆட்சியர் துவக்கி வைப்பு

77பார்த்தது
ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி: ஆட்சியர் துவக்கி வைப்பு
உலக சுற்றுச்சூழல் தினத்தினை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1. 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி களக்காட்டூர் ஊராட்சியில் துவக்கி வைத்தார்.


இந்தியாவில் காலநிலை மாற்றங்களால் பல்வேறு நிகழ்வுகள் நடந்துவரும் இல்லையில் உலக வெப்பமயமாதல் சுற்றுச்சூழலுக்கு கேள்விகளை வைக்கும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில் மரகன்றுகளை நட்டு வரும் சமுதாயத்திற்கு நல்ல ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்க நோக்கில் தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாவட்டங்கள் தோறும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் உடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் இணைந்து கிராமங்களில் மரக்கன்றுகள் நடும்பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி களக்காட்டூர் ஊராட்சியில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.


இவ்ஊராட்சியில் 5 ஏக்கர் பரப்பளவில் 500 மக்களுக்கு பயன் தரும் மரங்களான மகாகனி உள்ளிட்ட மரக்கன்றுகளை நடும் பணி செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி