கூடுவாஞ்சேரி அருகே பாலியல் தொல்லை கொடுத்த பெரியப்பா கைது

60பார்த்தது
கூடுவாஞ்சேரி அருகே 8-ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியப்பாவை கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பெரியப்பாவை போலீசார் கைது செய்தனர்.

கூடுவாஞ்சேரி காமேஷ்வணி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (42) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ரவி வீட்டில் இருந்த போது தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தனது தம்பியின் மகளான 8-ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அப்போது மாணவி தனது பெரியப்பா அழைத்ததின் பேரில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கதவை பூட்டிய ரவி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளான். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவி பெரியப்பாவின் வீட்டை விட்டு வெளியேறி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோர் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி