காஞ்சி மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு!

69பார்த்தது
காஞ்சி மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில், 37 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பினர், 33 நேரடி கொள்முதல் நிலையம் என, மொத்தம், 70 நெல் கொள்முதல் நிலையங்களில், கடந்த ஆக்டோபர் மாதம் முதல், ஜூலை மாதம் வரை நெல் கொள்முதல் செய்தனர்.



காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து, 6. 97 கோடி கிலோ நெல்லை நுகர்பொருள் வாணிப கழகத்தினர் கொள்முதல் செய்து உள்ளனர். இதை, 40 கிலோ எடை கொண்ட, 17. 43 லட்சம் நெல் மூட்டைகளாக கட்டவாக்கம் பகுதியில் நுகர்பொருள் வாணிப கழத்தினர் சேமித்து வைத்து உள்ளனர்.
இதில், 40 கிலோ நெல் மூட்டை துாற்றி சுத்தம் செய்து, லோடு ஏற்றுவதற்கு, 10 ரூபாய் அரசு வழங்கப்பட்டு உள்ளது என, நுகர்பொருள் வாணிப கழகத்தினரே விவசாயி ஒருவருக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவல் அடிப்படையில், 40 கிலோ அடங்கிய ஒரு மூட்டைக்கு, 10 ரூபாய் என கணக்கீடு செய்தால், 1. 74 கோடி ரூபாய், 9388 நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளின் மூலமாக, பல்வேறு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும்.

இதை, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளின் ஆசியுடன், அரசு மற்றும் கட்சி முக்கிய பொறுப்பில் இருப்போர் பங்கு போட்டுக் கொள்வதாக விவசாயிகள் சங்கங்கள் இடையே, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி