காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் கோவிந்தாபுரம் -- அனுமந்தபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையின் இருபுறமும் மழைநீர் செல்ல வழி இல்லாததால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும், சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.