தமிழர் திருநாள் பொங்கல் வரும் 13ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி, பல்வேறு இடங்களில் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மக்களுக்கு பொங்கல் தொகுப்புகளையும் வழங்கி வருகிறார். அதன்படி, நாளை செங்கல்ப்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி, கடப்பாக்கம் பகுதியில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை கலந்து கொண்டு மக்களுக்கு பொருட்களை வழங்க உள்ளார்.