மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில்
உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ்
கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி வளாகத்தில்
டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கேரம், செஸ், ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் உள்ள உள் விளையாட்டு அரங்கம், நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி மையம் ஆகியவை புதிதாக கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி கல்லூரி அறங்காவலர் கோ. ப. அன்பழகன்
தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்துகொண்டு
உள் விளையாட்டு அரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளை
விளையாடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்
தேசிய கிரிக்கெட் தேர்வாளர்
ஸ்ரீதரன், சாரதி டிஎன்பிஎல் தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.