முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

1073பார்த்தது
கோட்டைபுஞ்சை கிராமத்தில் 7 அடி உயரத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்துள்ள ஆட்டுபட்டி கோட்டைபுஞ்சை கிராமத்தில் ஸ்ரீ வனதுர்கை அம்மன் சித்தர் பீடத்திற்கு சொந்தமான நிலத்தில் 7 அடி உயரத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வெண்கல சிலையுடன் கூடிய கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம். எல். ஏ, ஒன்றிய பெருந் தலைவர்கள் ஆர். டி. அரசு, ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் டைகர்குணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். அதனை தொடர்ந்து கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். விழா ஏற்பாடுகளை வனதுர்க்கை அடிகளார் வினோத் செய்திருந்தார்.

டேக்ஸ் :