கடம்பாடி கோவிலில் ரூ. 4. 64 லட்சம் காணிக்கை

66பார்த்தது
கடம்பாடி கோவிலில் ரூ. 4. 64 லட்சம் காணிக்கை
ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில், மாரி சின்னம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. தற்போது, பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன.

அதன் உண்டியல்களில், கடந்த பிப். , முதல் நேற்று வரை, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் அனைத்தும், ஆய்வாளர் பாஸ்கரன், செயல் அலுவலர் சக்திவேல் மேற்பார்வையில் கணக்கிடப்பட்டன.

அதில், 4, 64, 287 ரூபாய், 7 கிராம் தங்கம், 28 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி