தாம்பரம் சானிடோரியம் இடையே சரக்கு ரயில்
தடம் புரண்டு விபத்து
தாம்பரம் சானிட்டோரியம் ரயில் நிலையம் அருகே வாகனங்களை ஏற்றி சென்று சரக்கு ரயில், ரயில்வே தண்டவாளம் மாறும்போது திடீரென தடம் புரண்டது. மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
உடனடியாக ஊழியர்கள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை புறநகர் ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ்கள் ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த சில மணி நேரங்களுக்குள் மீட்பு பணி பிரச்சனை இல்லாமல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.