சோத்துப்பாக்கத்தில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி திடீர் ஆய்வு

53பார்த்தது
சோத்துப்பாக்கத்தில் துரித உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீர் ஆய்வு அபராதம்




செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கத்தில் இயங்கி வரும் மகாராஜா துரித உணவகத்தில் சுகாதாரமற்ற நிலையிலும் தரமாற்ற கெட்டு போன பொருட்களிலும் உணவாக துரித உணவகத்தில் வழங்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு புகாராக சென்றதால் அதன் அடிப்படையில் இன்று. சித்தாமூர் லத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஈஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது அந்த துரித உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி மீன் சுகாதாரமற்ற நிலையில்இருந்த சமையல் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் சமையல் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார் கெட்டுப்போன மீன் இறைச்சி போன்றவையை உடனடியாக அகற்ற
உத்தரவிட்டார் மேலும் சுகாதாரம் அற்ற நிலையில் உள்ள உணவுப் பொருட்களையும் பாத்திரங்களை இடங்களையும் உடனடியாக சுத்தம் செய்து இரண்டு நாட்களில் உணவக நிர்வாகம் இதற்கு உண்டான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் எங்களுக்கு அதை பதிலாக அளிக்க வேண்டும் எனவும் இந்த ஆய்வில் அபராதம் ரூபாய் 1000 தொகையாக போடப்பட்டது மேலும் ஏழு நாட்களுக்குள் உணவக. நிர்வாகம் உரிய பதிலை அளிக்கவில்லை என்றால் மாவட்ட அளவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மூலம் நோட்டீஸ் வழங்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி