செங்கையில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பாதிப்பு

62பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 39 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 62 கோடி ரூபாய் அளவிற்கு 3647 விவசாயிகளுக்கு பணம் செலுத்தாமல் பாக்கி வைத்ததால் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 39 நெல் கொள்முதல் நிலையங்களிலும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் கோரப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டும் தற்போது வரை நெல் கொள்முதல் செய்யாமல் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் முளைத்துள்ளது. சுமார் 35 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாததால் 5000 நெல் மூட்டைகளுக்கு மேல் வீணாகப் போகும் நிலை உள்ளது. தனியார் வியாபாரிகளிடம் நெல் விற்பனை செய்திருந்தால் கூட ஏதாவது கிடைத்திருக்கும் தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு நெல்லை கொள்முதல் செய்தால் கூட செய்த செலவு கூட தங்களுக்கு மிஞ்சது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி