சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.!!!
ஜாதி மத பேதம் இன்றி முஸ்லிம் பெண்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்ட நெகழ்ச்சி.!!
உழைக்கும் தமிழ் மக்கள் தாமே தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும் தம்மோடு சேர்ந்த உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியை மற்றும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்து சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகர தொடங்கும் நாளை தைப்பொங்கல் என்பார்கள்.
அந்த வகையில் நாடு முழுவதுமே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கே வெகு விமர்சையாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சியில் மகளிர் குழுக்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பிரேமலதா குப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் மாவட்ட குழு உறுப்பினர் பூங்கோதை ராஜன் மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த பொங்கல் விழாவில் ஏராளமான குழுக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து குளவை போட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.