பொங்கல் விடுமுறையையொட்டி, மக்கள் சென்னையில் இருந்து, சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதன்படி இன்று மாலை முதல் சென்னை - புதுச்சேரி கிழக்குகடைற்கரை சாலையில் கார்கள் அதிகளவில் குவிய தொடங்கியுள்ளது. மேலும் வேகமாகவும் செல்கிறது. இதனால் சாலையில் செல்லும் மக்கள் கவனமாகவும், பாதுகாப்பாக செல்ல சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.