அச்சரப்பாக்கம் அருகே அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சரிவர மின்சாரம் விண்ணப்பிக்கப்படவில்லை எனக் கூறி மின்வாரிய அலுவலகத்தை வாயிலில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே அம்மணம்பாக்கம் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் பள்ளிக்கூட தெரு மற்றும் பெருமாள் கோயில் தெருவில் 100 - க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தொடர்ந்து மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் மின்சாரம் இல்லாமல் மின்சார மின்சாதனப்பெருக்க பயன்படுத்த முடியாமல், பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முதல்வரின் தனி பிரிவுக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே,
அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தோர் 50-க்கும் மேற்பட்டோர் அச்சரப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.