மோட்டூர் பள்ளி இரும்பு கேட் சேதம்

71பார்த்தது
மோட்டூர் பள்ளி இரும்பு கேட் சேதம்
சிறுவாக்கம் ஊராட்சியில், மோட்டூர் துணை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ், 5 லட்சம் ரூபாய் செலவில், சுற்றுச்சுவர் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக்கு கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய இரு திசை சுற்றுச்சுவரிலும் இரும்பு கேட் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், கிழக்கு திசையில் இருக்கும் கேட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர்.

பள்ளி விடுமுறை தினங்களில், ஆடு, மாடுகளால் மாணவர்களுக்கு தொந்தரவு இருக்காது. பள்ளி வேளை நாட்களில், ஆடு, மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, மாணவர்களின் பெற்றோர் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, புதிய கேட் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி