செங்கல்பட்டில் மண்ணை வாங்கி வயலில் கொட்டிய கவுன்சிலர் கைது

82பார்த்தது
செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு நேதாஜி நகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்காக செங்கல்பட்டு அடுத்த பொன் விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள ஏரியிலிருந்து மண் எடுத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை எஸ் ஆர் குரூப்ஸ் என்னும் நிறுவனம் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகள் மூலம் மண்ணை எடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏரியிலிருந்து எடுக்கப்படும் மண் பொன் விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் சின்னம்மாள் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியில் கொட்டப்பட்டு வருவதாக பொன் விளைந்தூர் கிராம நிர்வாக அலுவலர் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் வயலில் ஏரி மண்ணுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜேசிபிகள், இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து வந்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் திமுக ஒன்றிய கவுன்சிலர் சின்னம்மாளை கைது செய்தனர். தொடர்ந்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி