"ஆசூரில் 3 இடங்களில் சிறுபாலம் கட்டுமானப் பணி"

58பார்த்தது
"ஆசூரில் 3 இடங்களில் சிறுபாலம் கட்டுமானப் பணி"
காஞ்சிபுரம் ஒன்றியம், ஆசூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர் வெளியேற முறையான வடிகால்வாய் வசதி இல்லாமல் இருந்தது.

இதனால், ஆண்டுதோறும் பருவமழையின்போது, விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியதால், சாகுபடி செய்யப்பட்டு நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியது.

இதனால், மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், ஆசூர் - நெல்வேலி சாலையின் குறுக்கே மூன்று இடங்களில், மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில், வெள்ளத்தடுப்பு நிதியின் கீழ், 90 லட்சம் ரூபாய் செலவில் மூன்று இடங்களில் சிறுபாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.

இப்பணி ஒரு மாதத்தில் முடிக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
"

தொடர்புடைய செய்தி