செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விழிப்புணர்வு

56பார்த்தது
செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இரயில் படிக்கட்டில் பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தானது மற்றும் தண்டனைக்குறிய குற்றமாகும் எனவே படிக்கட்டு பயணத்தை தவிர்ப்பீர் என விழிப்புணர்வு நடத்தினர்.

செங்கல்பட்டில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரயிலில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் 15 முதல் 20 பேர் ரயில் விபத்தில் உயிரிழந்து வருகின்றனர். அதில்பெரும்பாலானோர் மாணவர்கள் தான், மேலும் ரயில் நின்ற பிறகே ரயிலில் இருந்து கீழே இறங்க வேண்டும் அதற்க்கு முன்பு இறங்க கூடாது, ரயில்புறப்பட்ட பிறகு ஒடி சென்று ரயிலில் ஏறுவதை தவிர்க்க வேண்டும், இல்லை என்றால் அடுத்த ரயிலில் பயணம் மேற்கொள்ள வேண்டும், மேலும் ரயில் வேகமாக செல்லும் போது கால்களை நடை மேடை மீது வைத்து தேய்த்துக்கொண்டு செல்வது ஆபத்தானது.
என பேசினர்.
இந்த விழாப்புணர்வில் அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்புபடை உதவி ஆய்வாளர்கள் ராமதாஸ், சிட்டிபாபு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி