காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏழு ஏரிகளில் மீன் பிடி உரிமையினை மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைவிடப்பட உள்ளன. மின்னணு ஒப்பந்தப் புள்ளிகள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர், காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தப் புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணைய தள முகவரியினை காணலாம். மேலும், 044-24492719 தொலைபேசி எண் மற்றும் adfmnkpm@gmail.com என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.