மதுராந்தகம்: அதிமுக ஆலோசனை கூட்டம்

78பார்த்தது
மதுராந்தகம் நகர வார்டு உறுப்பினர்களுக்கு இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை புதிய நிர்வாகிகள் சேர்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் இவர்களின் பெயரில் மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை கே சி சரவணன் தலைமையில் நடைபெற்றது. 

மதுராந்தகம் நகரில் உள்ள 24 வார்டு உறுப்பினர்களும் மற்றும் கழக நிர்வாகிகளுடன் புதிதாக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை நிர்வாகிகள் 25 பேர் சேர்ப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற ஆலோசனை வழங்கப்பட்டது. வார்டு உறுப்பினர்களிடம் புதிய இளைஞர்கள் இளம்பெண் பாசறை சேர்ப்பதற்கான படிவத்தை வழங்கி ஆலோசனை வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எம்பி சீனிவாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி