கையுறையில்லாமல் தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்ட ஒரு பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இந்த பேரூராட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த துப்புரவு பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி தூய்மைப்படுத்துவது வழக்கம் இந்த நிலையில் அச்சரப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணி செய்யும் அவல நிலையானது ஏற்பட்டுள்ளது. இதனால் துப்புரவு பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே துப்புரவு பணியாளர்களின் நலம் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.