மண் திட்டுகள் நிரம்பிய தடுப்பணை மழைநீர் சேகரிப்பதில் சிக்கல்

83பார்த்தது
மண் திட்டுகள் நிரம்பிய தடுப்பணை மழைநீர் சேகரிப்பதில் சிக்கல்
மதுராந்தகம் அடுத்த மேலவளம்பேட்டை தடுப்பணையில் மண் துார்ந்து உள்ளதால், துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கள்ளபிரான்புரம் கழனி வெளிப்பகுதியில் இருந்து செல்லும் மேலவளம்பேட்டை ஓடை, மதுராந்தகம் -- திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையை கடந்து, வீராணக்குன்னம் அருகே கிளியாற்றில் கலக்கிறது.

இந்த ஓடையில், மேலவளம்பேட்டை அருகே, 15 ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் ஊற்று அதிகரித்ததால், வேளாண்மைக்கு விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது, தடுப்பணையில் மண் திட்டுகள் நிரம்பி உள்ளன. இதன் காரணமாக, குறைந்த அளவு தண்ணீர் நிரம்பி நிற்கிறது.

எனவே, தடுப்பணையை துார்வாரி ஆழப்படுத்தவும், இரு கரைகளையும் பலப்படுத்தி சீரமைக்கவும், துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி