காஞ்சிபுரம் ஒன்றியம், திம்மசமுத்திரம் ஊராட்சி, பாலாஜி நகரில், ஊராட்சி பொது நிதியில் இருந்து, 2021- - 22 நிதியாண்டில், 10 லட்சத்து 85, 000 ரூபாய் செலவில், கடந்த ஆண்டு புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
சாலை அமைத்த ஓராண்டிலேயே சிமென்ட் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு புற்கள் முளைத்து உள்ளன. மேலும், பிரதான தார்ச் சாலையில் இருந்து, பாலாஜி நகர் சிமென்ட் சாலை துவங்குமிடத்தில், சேதமடைந்து உடைந்துள்ளதால், சாலையின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, விரிசல் ஏற்பட்டு, சேதமடைந்த சிமென்ட் சாலையை சீரமைக்க வேண்டும் என, திம்மசமுத்திரம், பாலாஜி நகரினர் வலியுறுத்தியுள்ளனர்.