மதுராந்தகம் நகரில் கலை கட்டிய இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்

73பார்த்தது
மதுராந்தகம் நகரில் கலை கட்டிய இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்
50 டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள் என ஆயிரம் பேர் அணிவகுத்து திமுகவினர் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வத்திற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம்




செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜி. செல்வம் அவர்களை ஆதரித்து மதுராந்தகம் நகர திமுக சார்பில் நகர கழக செயலாளர் குமார்அவர்கள் ஏற்பாட்டில் விவசாயிகள் 50 டிராக்டர், நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம், மாட்டு வண்டியில் பயணம் செய்தவாறு சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி