செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 1999 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் 25 வருடங்களுக்கு பிறகு கல்லூரியில் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்கள் தற்போது
அமெரிக்கா ஜெர்மனி லண்டன் சிங்கப்பூர் ஆஸ்திரேலியா ஐரோப்பா மற்றும் இந்தியாவின் பல நகரங்களில் பணிபுரியும் இவர்கள் கல்லூரி வளாகத்தில் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் கோ. ப. செந்தில்குமார், கல்லூரி முதல்வர் முனைவர் ராஜா, கல்லூரியின் டீன் முனைவர் ராமசாமி, நிர்வாக அலுவலர் சதானந்தம், ஆகியோர் முன்னிலை கல்லூரியில் பயிலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் 3 லட்சத்திற்கான காசோலையை கல்லூரியின் தாளாளரிடம் வழங்கி
25 வருடங்களுக்கு முன்பு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கவிதா, அமுதா, வித்யா, காளிராஜன் மற்றும் சுடர்வண்ணன் ஆகியோருடன் மற்ற முன்னாள் மாணவர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்தனர் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மணிமாறன் நன்றி உரை ஆற்றினார்.