தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலம், புதுப்பெருங்களத்துார், பாலாஜி நகரில், அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது. 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இப்பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிந்து செல்ல வழியின்றி, பள்ளி வளாகத்தில் தேங்குகிறது.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, டெங்கு கொசு உற்பத்தி அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சுகாதார துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்