செங்கல்பட்டு போலீசாரின் புதிய முயற்சி: பரனூர் சுங்க சாவடியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தனி பாதை
உலக தமிழர்கள் கொண்டாட கூடிய மிக முக்கிய விழாவாக பொங்கல் விழா இருந்து வருகிறது. உழவர் திருநாளாக பார்க்கப்படும் தைத்திருநாளை உலகத் தமிழர்கள் எங்கிருந்தாலும் கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் விழா வருகின்ற செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வார விடுமுறை நாட்கள் மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறை என, தொடர் விடுமுறை வரவுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து ஏராளமானோர் தென் மாவட்டத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர் இந்த நிலையில் செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி அருகே சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தனியாக பாதை அமைத்து அந்த வழியாக சுலபமாக சுங்க சாவடியை கடப்பதற்கு போலீசார் வழி செய்து உள்ளனர்
போலீசாரின் இந்த முயற்சியால் செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடியில் தற்பொழுது நெரிசல் இல்லாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.!!