ரூ. 8. 7 கோடியில் திருமண மண்டபம் கட்டுமான பணி துவக்கம்

84பார்த்தது
ரூ. 8. 7 கோடியில் திருமண மண்டபம் கட்டுமான பணி துவக்கம்
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் இருந்த அன்னை அஞ்சுகம் திருமண மண்ட பம், 1971ல், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் பராமரிப்பில் இருந்த திருமண மண்டபம், குறைந்த கட்டணம் என்பதால், பொதுமக்கள் சுபநிகழ்ச்சிகளுக்கு அதிகளவு பயன்படுத்திவந்தனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால், பொலிவிழந்தும், சில பகுதிசிதிலமடைந்த நிலையில் இருந்த இம்மண்டபத்தை, நவீன வசதிகள் கொண்ட நவீன திருமண மண்டபமாக மாற்றியமைக்ககாஞ்சிபுரம் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மறறும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாநகராட்சி, மத்திய மானிய நிதி திட்டம் 2023- - 24ன் கீழ், 8. 7 கோடி ரூபாய் செலவில் புதிதாக நவீன திருமண மண்டபம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த பிப். , மாதம் 6ல் நடந்தது. இதை தொடர்ந்து புதிய மண்டபம் கட்டுமானப் பணிக்கான ஆயத்தப் பணிகள் துவங்கின. இதில், முதற்கட்டமாக பழைய கட்டடம் முற்றிலும் இடிக்கப்பட்டு கட்டட கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டன. தற்போது, கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைப்பதற்காக ஆழ்துளை குழிகள் எடுக்கும் பணி துவங்கியுள்ளது. திருமண மண்டபம் கட்டுமானப் பணி ஒராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என, மாநகராட்சி பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி