செங்கல்பட்டு: அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கல்

79பார்த்தது
செங்கல்பட்டு: அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கல்
செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தின் கீழ் திருப்போரூர் ஒன்றியத்தில் தண்டலம், சிறுதாவூர், திருப்போரூர் உள்ளிட்ட 50 ஊராட்சிகளில், 163 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

மேற்கண்ட அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா வண்ண சீருடைகள் மற்றும் புத்தகம், விளையாட்டு பொருட்கள் வழங்கும் துவக்க விழா, திருப்போரூர் அங்கன்வாடி மையத்தில் நேற்று நடந்தது. திருப்போரூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூர்ணிமா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, திருப்போரூர் ஒன்றியக் குழு தலைவர் இதயவர்மன் பங்கேற்று, குழந்தைகளுக்கு சீருடைகள், புத்தகம், ஊட்டச்சத்து உணவு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி