மதுராந்தகம்: நியாவிலைக் கடையில் பொருள்வாங்குவதில் சிக்கல்

85பார்த்தது
தமிழக அரசு நியாய விலை கடைகளில் பயோமெட்ரிக் மூலம் கைவிரல் பதிந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பயோமெட்ரிக் மூலம் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக கூறி, இந்த முறைக்கு மாற்றாக ஐடிஎஸ் எனப்படும் கருவிழி திரை ஸ்கேன் செய்து அதன் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், அதன் நடைமுறை துவங்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நியாய விலைக் கடையில் இன்று ஒரு நாள் 150 நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டிய நிலை உள்ளது. 

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு நியாய விலை கடைகளில் புதியதாக கொண்டு வந்துள்ள ஐடிஎஸ் எனப்படும் கருவிழி ஸ்கேன் பதிவாக்கத்தால் ஒரு நபருக்கு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கருவிழி ஸ்கேன் பதிவாக்கம் செய்யப்படுவதால் நியாய விலை கடைகளில் வரும் பொதுமக்கள் நீண்ட நேரமாக நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு ஐடிஎஸ் ஸ்கேன் முறையை நிறுத்திவிட்டு பயோமெட்ரிக் முறையினை கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி